தேர்தலுக்கு முன்னதாக மியான்மர் ஆட்சிக்குழு, ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியை கலைத்து விட்டது.
சுமார் இரண்டு ஆண்டுகால ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, இராணுவ ஆட்சியால் நியமிக்கப்பட்ட மியான்மர் தேர்தல் ஆணையம், பதவி நீக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் கட்சி கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஆங் சான் சூகியின் கட்சி உட்பட மொத்தம் 40 அரசியல் கட்சிகள் இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் தேர்தலில் வெற்றியை இராணுவ ஆதரவுக் கட்சியான யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மென்ட் கட்சி கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.