பாகிஸ்தான் அரசின் உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்கு, இந்தியாவுக்குள் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இதற்கு சட்டரீதியான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இரண்டு முறை டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு, மீண்டும் அது செயல்பாட்டுக்கு வந்தது.
இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் என்று கடந்தாண்டு ஜூலை மாதம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தான் டிவிட்டர் கணக்கு, சில யூடியூப் சேனல்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.