இங்கிலாந்தில் ஆசிரியர்களின் பணிச்சுமையை வாரத்துக்கு சராசரியாக 5 மணிநேரம் குறைக்க உதவும் வகையில், புதிய பணிக்குழு உருவாக்கப்படும் என்று கல்விச் செயலாளர் கில்லியன் கீகன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதி ஆசிரியர்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என அரச அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.
22 சதவீதமான ஆசிரியர்கள் தாங்கள் வாரத்திற்கு 60 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
கல்வித் துறையால் (DfE) நியமிக்கப்பட்ட ஆராய்ச்சி, கடந்த 2022 ஆண்டு வசந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பணிச்சுமை, ஆட்சேர்ப்பு தொடர்பான சிக்கல்களை ஆராய, DfEக்காக தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கை மிகவும் ரகசியமாக இருந்த நிலையில், அது தற்போது கசிந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், ஆசிரியர் சங்கங்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள உறுப்பினர்களின் பணிச்சுமையை குறைக்கும் வாக்குறுதியை உள்ளடக்கிய புதிய ஊதிய சலுகை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.