இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மக்களின் வரிப்பணத்தில் உல்லாசம் செய்யும் பிரதமர் என்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்த போது நிதி அமைச்சராக இருந்தார். போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்ததன் பின் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவிவகித்தார் அவரும் 45 நாட்களில் ராஜினாமா செய்தபின் போட்டி இன்றி ஆட்சிக்கு வந்தார் பிரதமர் ரிஷி சுனக்.
போரிஸ் ஜான்சன் ஆட்சிக்காலத்திலே நிதியமைச்சராக இருந்த சுனக் கொரோனாவின் பின் வரைந்த பட்ஜெட் மக்களின் வரி சுமையை அதிகரித்தது இதனால் பெரும் சரிவை மக்கள் மத்தியில் பெற்றார் இப்போது அவரது செலவீடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர் எகிப்து, பாலி, லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்று வந்துள்ளார்.
பாலி பயணத்தின் போது ரிஷி சுனாக் தம்முடன் 35 அதிகாரிகளை அழைத்துச் சென்றுள்ளார். தனியார் விமானம் ஒன்றை பிரிட்டன் அரசு முன்பதிவு செய்திருந்தாலும், அது அரசாங்க விமானம் போன்றே கொடி பொறிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரிஷி சுனாக் 6 வார காலத்தில் விமான பயணத்திற்காக மட்டும் 5 லட்சம் பவுண்டுகள் செலவு செய்துள்ளார்.
பொதுமக்கள் வரிப்பணத்தில் வீண் செலவுகளை ஏற்படுத்துவதாக ஏற்கனவே ரிஷி சுனக் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.