TikTok செயலியினால் முக்கிய செய்தித் தளங்களுக்கு மிகப் பெரிய ஆபத்து நேரலாம் என்று, ஆஸ்திரேலியச் செய்தி நிறுவனமான Sky News எச்சரித்துள்ளது.
அதேவேனை, TikTokஇல் காணப்பட்ட சில பாதுகாப்புப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, TikTokஇல் இருந்த அதன் கணக்கையும் Sky News அகற்றியுள்ளது.
“TikTok ஒரு வேவுபார்க்கும் கட்டமைப்பு” என்றும் “அது சமூக ஊடகத் தளம் என்ற போர்வையில் செயல்படுகிறது” என்றும் Sky News குற்றஞ்சாட்டியுள்ளது.
ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் தனிப்பட்ட தகவல்களை TikTok செயலி சட்டவிரோதமாகத் திரட்டுவதாகவும் Sky News குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்மையில் பல நாடுகள், தங்கள் அரச நிறுவனங்களில் TikTok செயலியைப் பயன்படுத்தத் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி : நியாயமாக இருங்கள்; உலக நாடுகளுக்கு சீனா வேண்டுகோள்