உலகிலேயே மிகவும் குள்ளமான நாய் எனும் பெருமையை, அமெரிக்காவைச் சேர்ந்த 2 வயதுடைய சிவாஹுவா இனத்தைச் சேர்ந்த நாய் பெற்றுள்ளது.
2020ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி பிறந்த பெர்ல் என்ற குறித்த பெண் நாய், 12.7 செண்டிமீட்டரே உயரமுடையதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெர்லின் எடை 533 கிராம் ஆகும்.
அண்மையில் இத்தாலியின் மிலான் நகரில் Lo Show Dei Record எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெர்ல் அறிமுகம் செய்யப்பட்டது.
பெர்ல் தமது செல்லப்பிராணியாக இருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம் எனவும் பெர்லுக்கு, கோழி மற்றும் சல்மன் மீன் வகை சாப்பிட பிடிக்கும் என்றும் அதன் உரிமையாளர் வனெசா செம்லர் (Vanesa Semler) தெரிவித்துள்ளார்.