பல மில்லியன் ஆண்டுகள் பழமையான வைரஸ்கள், புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மில்லியன் கணக்கான ஆண்டுகளாக மனித DNAக்குள் மறைந்துள்ள பண்டைய வைரஸ்கள், உடல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபிரான்சிஸ் கிரிக் நிறுவகம் (Francis Crick Institute) நடத்திய ஆய்வில், புற்றுநோய் செல்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் போது, பழைய வைரஸ்களின் செயலற்ற எச்சங்கள் விழித்தெழுகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நுரையீரல் புற்றுநோயிலிருந்து சிறந்த உயிர்வாழ்வதற்கும் B-செல்கள் எனப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் இதில் கவனித்துள்ளனர்.