ஜப்பான் பிரதமர் புமியோ கிசிடா மீது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருந்த வேலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த இடத்தின் அருகே வீசப்பட்ட பைப் வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. பிரதமர் புமியோ கிஸிட வாகாயானாவில் உள்ள சைக்காசாகி மீன்பிடித்துறை முகத்தின் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடைப் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து பாதுகாவலர்கள் அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஒருவரை மடக்கிப் பிடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.