இலங்கை மக்களின் அனைத்து விதமான மனித உரிமைகளையும் மீறும் வகையில் உள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அமெரிக்கா மெளனியாக இருப்பது மக்களுக்கு நல்லது அல்ல என்று சர்வதேச மன்னிப்புச் சபை கருத்து முன்வைத்துள்ளது.
மேலும் ஜோ பைடனின் நிர்வாக குழு மக்களின் மனித உரிமை நலன் பேணப்பட வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் இருக்கும் பட்டசத்தில் நிச்சயம் இலங்கையரசுடன் கலந்துரையாட வேண்டும் என்றது .
இப்போது அமுலுக்கு வரவுள்ள உத்தேச பயங்கரவாத சட்டமானது மனித உரிமை சட்டத்தின் அனைத்து அளவுகோலையும் மீறியதாக உள்ளது . என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியாவுக்கான பரப்புரை இயக்குனர் கரோலின் நஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வரசு 40 ஆண்டுகளுக்கு மேல் சிறுபான்மை இனத்தவரையும் ,தன்னை எதிர்ப்பவரை அடக்கவுமே இந்த சட்டத்தை உபயோகித்து வருகின்றது.இந்த செயற்பாடு இலங்கை சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே ஆகும்.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டின் முன்னேற்றத்துக்காவும் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கவும் உருவாக்கப்படவில்லை என்றும் கரோலின் நஸ் கூறியுள்ளார்.