தன்னைவிட்டு மகளுடன் பிரிந்து செல்வதாக கூறிய மனைவி மற்றும் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கிரேட் வால்டிங்ஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடிய, கணவனான 47 வயதான பீற்றர் நாஷ், தனது மனைவி ஜில்லு நாஷ் மற்றும் மகள் லூயிஸ் ஆகியோரை தான் கொலை செய்யவில்லை என மறுத்துள்ளார்.
2022 ஆரம்பத்தில், மனைவியான ஜில்லு நாஷ் மற்றுமொருவருடன் நெருக்கமான நிலையில், தமது கணவரை விவாகரத்து செய்த திட்டமிட்டுள்ளார்.
2009 இல் திருமணம் முடித்த இவர்கள் இருவரும் மனக்கசப்புடனே இருந்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
மேலும், 2020 இல் பீற்றர் நாஷ் தமது வேலையை இழக்கும் நிலையும் ஏற்பட்டதையடுத்து, ஆட்டிசம் பாதித்த தமது மகளை முழு நேரமும் கவனிக்கும் பொறுப்பும் சேர்ந்துள்ளது.
இந்த நிலையில், தனது மனைவியும் அவரது காதலனும் ஒன்றாக ஊர் சுற்றுவதை பீற்றர் நாஷ் பார்த்துள்ளார். இப்படியான சூழலிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கடந்த செப்டெம்பர் 8ஆம் திகதி ஜில்லு நாஷ் வேலைக்கு செல்லவில்லை லூயிஸ் பாடசாலைக்கு செல்லவில்லை, இதனையடுத்து, பொலிஸார் அவரின் வீட்டுக்கு விசாரிக்க சென்றுள்ளனர்.
பின்னர் பூட்டியிருந்த வீட்டை உடைத்த பொலிஸார், ஜில்லு மற்றும் லூயிசின் சடலங்களை மீட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.