42 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தந்தை, சசெக்ஸ் பொலிஸார் “கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும்” இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளதுடன், புதிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
08 வயதான விஷால் மெஹ்ரோத்ரா, ஜூலை 1981 இல் மேற்கு லண்டனில் இருந்து கடத்தப்பட்டார். ஏழு மாதங்களுக்குப் பிறகு மேற்கு சசெக்ஸின் ரோகேட்டில் அவரது எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிறுவனின் கொலை தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.
சிறுவனின் தந்தையான ஓய்வு பெற்ற மாஜிஸ்திரேட் விஷம்பர் மெஹ்ரோத்ரா, வழக்கை கையாள்வது குறித்து சசெக்ஸ் பொலிஸார் மீது தனக்கு “நம்பிக்கை இல்லை” என்றார்.
தீர்க்கப்படாத வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற தேசிய வழிகாட்டுதலுக்கு மாறாக 1981இல் இருந்து முறைப்படி ஒருமுறை மட்டுமே விசாரணை ஆய்வு இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செய்தியை தி கார்டியன் வெளியிட்டுள்ளது.