உலகில் சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் இல்லை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
காலநிலை மாற்றத்துக்கும் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் இருப்பதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
தண்ணீர் மாசுபடிவதும், அளவுக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்துவதும் தண்ணீர்த் தட்டுப்பாட்டின் அக்கறைக்குரிய வேறு சில அம்சங்களாக உள்ளன.
கடந்த 40 ஆண்டில் ஆண்டுக்கு ஒரு சதவீதம் என்று தண்ணீர்ப் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.