போர்கள பூமியாகி உள்ள உக்ரைன் வானில் திடீரென பிரகாசமான ஒளிப்பிழம்பு தோன்றியதால் அந்நகர் மக்கள் மிகவும் பதற்றம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் கீவ் வான்பரப்பில் நேற்றைய இரவு 10 மணியளவில் பிரகாசமான ஒளிப்பிழம்பு தோன்றியடுத்து விமானத்தாக்குதல் என்று அஞ்சி விமானத்தாக்குதலுக்கான விழிப்புணர்வு ஒலி எழுப்பப்பட்டது.
பின் வான்தாக்குதல் இல்லை என்பது அறியப்பட்டது . நாசாவின் செயலிழந்த rhessi செயற்கை கோள் அள்ளது விண்கல் வான் பரப்பில் நுழைந்து எரிந்து விழுந்ததால் ஒளிப்பிழம்பு தோன்றி இருக்கலாம் என விமானப்படை கூறியுள்ளது.