நடுவானில் வெடித்து சிதறியது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட் .
ஸ்டார்ஷிப் ராக்கெட் ஆனது விண்வெளி வீரர்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டு பரிசோதனைக்காக விண்ணில் ஏவப்பட்டு ஒரு சில நொடிகளிலேயே வெடித்து சிதறியது.
சந்திரன், செவ்வாய் மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் தன் பணியை மேற்கொள்ளும் விண்கலங்களுக்கு தேவையான பொருட்களை மற்றும் விண்வெளி வீரர்களை கொண்டு செல்வதை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்ஸ்சாஷிலுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது. மூன்றாவது நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து பூஸ்டர் பிரியாமையால் வெடித்து சிதறியது.
எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமே நாஸாவுக்கு வீரர்களை கொண்டு சென்ற தனி நிறுவனம் என்ற பெருமையை 2020 பெற்றமை குறிப்பிடத்தக்கது.