சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது.
துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை இராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் இராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு மோதல் வெடித்தது.
சூடானில் இராணுவம், துணை இராணுவம் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருவதால் பதற்றமான சூழல்நிலை நிலவருகிறது.
இந்த நிலையில், உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் தற்காலிகமாக 72 மணி நேரத்துக்கு சண்டையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்துக்கு எதிராக போராடி வரும் துணை இராணுவ படையினர் போர் நிறுத்ததுக்கு ஒத்துக்கொண்டுள்ளனர்.
ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி 3 நாட்களுக்கு போர் நிறுத்ததுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.