ரஷ்ய விமானப்படை, தனது நகரத்தின் மீது தானே குண்டு வீசியதால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
வெடிகுண்டு பீதியால் ரஷ்யாவில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெல்கோரோட் என்ற நகரில் ரஷ்ய போர் விமானம் தவறுதலாக வெடிகுண்டை வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக அப்பகுதியில் உள்ள 17 அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை வெளியேற்றினர்.
பின்னர், வெற்று மைதானம் ஒன்றில் அந்த வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெல்கோரோட் நகர மக்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
அதேவேளை, கடந்த வியாழன்று ரஷ்யாவின் சுகோய் 34 ரக விமானம் பெல்கோரோட் நகர் மீது தவறுதலாக குண்டு வீசியதில் 3 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.