நேற்றய தினம் பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்புத்துறை காவல் நிலையத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் பதிவானத்தில் 8 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
வெடிப்பு சம்பவம் நடைபெற்ற மாகாணத்தில் காவல் துறைத் தலைவர் அஃக்தர் ஹயாத் என்பவர் விசாரணைகளை நடத்தி வரும் நிலையில் அவர் இரு கோணங்களில் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார். பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்ததா இல்லை பயங்கரவாத தாக்குதலால் நிகழ்ந்ததா என ஆராயவேண்டும் என்பதே அது.
இறந்த பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகளே இதில் இறந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் நிலை மிக கவலைக்கிடமாக உள்ளது மேலும் விபத்துள்ளான காரணத்தை அறிய பல தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன