0
பாகிஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிந்து மாகாணத்தின் தாட்டா மாவட்டத்தில் செவ்வாய் (25) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 24 முதல் 40 வயதானவர்கள் எனவும் பொலஸார் தெரிவித்துள்ளனர்.