சுமார் நூற்றாண்டு காலப்பகுதியில் பாப்புவா நியூ கினிக்குச் செல்லும் முதலாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை ஜோ பைடன் பெறவுள்ளார்.
பைடனின் இந்தப் பயணம் குறித்து, பாப்புவா நியூ கினியின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்டின் கட்சென்கோ (Justin Tkatchenko) அறிவித்துள்ளார்.
அதன்படி, மே மாதம் 22ஆம் திகதி சுமார் 3 மணிநேரம் பாப்புவா நியூகினியில் பைடன் இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
G7 நாடுகளின் சந்திப்பிலும் சிட்னியில் QUAD உச்சநிலை மாநாட்டிலும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் கலந்துகொள்ளவுள்ளார். அவற்றுக்கிடையே, அவர் பாப்புவா நியூ கினிக்கு வருகை தருவார் என்று கட்சென்கோ தெரிவித்துள்ளார்.
பொருளியல், பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இதன்போது ஆலோசனை நடத்தப்படக்கூடும் என்று பாப்புவா நியூ கினியின் வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம் : AFP