நேற்றைய தினம் அதிகாலை பாகிஸ்தானில் ரயில் ஒன்று தீப்பற்றியதால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 4 சிறார்களும் அடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி சென்றுகொண்டிருந்த கராச்சி எக்ஸ்பிரஸ் ரயிலே இவ்வாறு தீப்பற்றியுள்ளது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
அதிகாலை 00.30 மணியளவில் இந்த ரயில் தீப்பற்றியது. 40 நிமிடங்களின் பின் தீ அணைக்கப்பட்டதாக பாகிஸ்தான் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு தீக்கிரையாகியுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.