சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள், 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அத்துடன், சூடானில் தற்போதைய நிலை மோசமாக இருப்பதாகவும், அந்நாட்டு இராணுவம் மற்றும் துணை இராணுவ போர் நிறுத்தத்தை நீட்டிக்கவேண்டும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இராணுவம் மற்றும் துணை இராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.
இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் இருந்து வெளிநாட்டினரை மீட்பதற்கு, அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையிலேயே, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை இந்தியா தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.