அமெரிக்காவைச் சேர்ந்த ஃபஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் (First Republic Bank) திவாலாகி மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வங்கியை கையகப்படுத்த அமெரிக்க அரசின் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ப்ளூபெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் பங்குகளின் விலை 74.25% குறைந்தமை , மேலும் பங்குகள் 61.83% குறைந்தமை . கடந்த வர்த்தக நாட்களின் அதன் ஒரு பங்கின் விலை 19 டாலர் என்ற குறைந்த புள்ளியை எட்டியதாக குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காகவில் சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட அடுத்த 48 மணி நேரத்தில் இன்னொரு வங்கியான சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டது.ஒட்டுமொத்த அமெரிக்க முதலீட்டு சந்தையையும் அச்சத்தில் ஆழ்த்தியது.
கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அந்த வங்கியின் பங்குகள் கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.வெள்ளிக்கிழமையன்று 40% சரிந்ததன் மூலம், இந்தாண்டில் இதுவரை 97% சரிவடைந்து இருப்பதாக தெரிகிறது.
இந்த வங்கியை மீட்க 11 மிகப்பெரிய கடன் நிறுவனங்கள் 30 பில்லியன் டாலர்களை வழங்கின. எனினும் வங்கி திவாலாவதை தவிர்க்க இயலவில்லை.இதே போன்ற பொருளதார நெருக்கடியில் சிக்கிய சிலிக்கான் வேலி வங்கியை அண்மையில் ஜோ பைடன் அரசு கையகப்படுத்தியது.
இதனால் மற்றொரு வங்கியை உடனடியாக கையகப்படுத்த வேண்டாம் என்று அரசு தயங்கி வந்தது. எனினும் வேறு வழி இல்லாததால் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி விரைவில் கையகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.