செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மே தின முக்கியத்துவம்

மே தின முக்கியத்துவம்

1 minutes read

உலகின்  வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் உழைப்பாளர்கள். அவர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. எப்போதும் ஓய்வில்லாமல் உழைக்கும் மக்களுக்கு விடுமுறை அளிக்கும் நாளாக உள்ளது. ஆனால் ஏன் மே 1-ம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்று கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது.

மே தினத்தின் முக்கிய நோக்கம்:

முன்பு உள்ள மக்கள் ஓய்வில்லமால் தொடர்ந்து வேலை பார்த்து கொண்டே இருந்தார்கள், அதிலும் குறிப்பாக அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கவில்லை.
இதை எதிர்த்து சிகாகோ நகரத்தில் 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றதன் அடையாளமே தொழிலாளர் தினம் உருவானதற்கு காரணமாக இருந்தது.

உழைப்பாளர்களின் எழுச்சி:
தொழிலாளர்களின் துன்பத்தை கண்டறிந்து, முதலாளிகள் தங்களது உழைப்பை சுரண்டுகின்றனர் என்பதை அறிந்து உலக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழைப்பாளர்கள் ஒன்று சேர்வதற்கு அடிக்கல் நாட்டியவர் காரல் மார்க்ஸ்.
உழைப்பு இல்லாமல் எந்த ஒரு பொருளும் உருவாகாது என்பதை உணர்ந்தும், ஆனால் இங்கு தொழிலாளர்கள் ஐந்தறிவு ஜீவன்களை விட கீழ்த்தரமான நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்றும் நினைத்தனர்.

அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்கள் சுமார் 3,50,000 பேர் கலந்து கொண்டு போராட்டத்தை நடத்தினர். மெக்சிகோவில் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் அமெரிக்காவை உலுக்கியது என்றே சொல்லலாம். இந்த போராட்டம் முதலில் அமைதியான முறையில் தான் நடைபெற்றது, ஆனால் இதில் பல தொழிலாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு, கொல்லப்பட்டனர்.
தொழிலாளர் தினம் வரலாறு: பின்னர் அங்கு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் முக்கிய கோரிக்கை தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பது தான். இந்த கோரிக்கை 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி நடைபெற்றது.
தொழிலாளர்களின் இந்த போராட்டத்தை தாங்க முடியாமால் அரசு 1890-ம் ஆண்டு ஏற்று 8 மணி நேர வேலைக்கு ஒத்துக்கொண்டது. இதன் விளைவாக உருவானது தான் தொழிலாளர் தினம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More