இங்கிலாந்து – தெற்கு லண்டன், லாம்பெத்தில் உள்ள ஸ்டாக்வெல் பார்க்கில் கத்திக்குத்துக்கு இலக்காகி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த 33 வயதுடைய நபர், பின்னால் இருந்து கத்தியால் குத்தித் தாக்கியதில் 30 வயது யுவதி நிலைகுலைந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
எனினும், இவ்விருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்கள் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதாவது, பொலிஸார் வழங்கிய தகவலில், உயிரிழந்து யுவதியும், கைது செய்யப்பட்ட நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று கூறுவதற்கு தற்போது எந்த ஆதாரங்களும் இல்லைக் எனக் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, சி.சி.டி.வி வீடியோவை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி : தெற்கு லண்டனில் கத்திக்குத்து; யுவதி பலி