உக்ரைன் மீதான ரசிய தாக்குதல் உச்சம் பெற்றுள்ள நிலையில் நேற்று மாலை ரசிய வான்வழி தாக்குதலில் உணவு சேமிப்பு கிடங்கு தீ பற்றி எரிந்தது.
உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான ஒடேசாவில் தமது தாக்குதலை ரசியா மேற்கொண்டுள்ளது.
கிர்கிவ், கெர்சன், மைகோலே , மற்றும் ஒடேசாவில் 24 மணி நேரத்தில் 16 ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஒடேசாவில் உள்ள உணவு சேமிப்பு கிடங்கில் சக்திவாய்ந்த ஏவுகணை வீசப்பட்டதில் அந்த கட்டிடத்தில் பெருந்தீப்பற்றி கொண்டது.
கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க ராணுவத்தினரும், தீயணைப்பு வீரர்களும் போராடிய காட்சிகளை உக்ரைன் அவசர சேவை அமைப்பு வெளியிட்டுள்ளது.