அகதிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் விளைவால் கப்பலை அகதி முகாமாக்குவது நல்லது என்று கருதப்படுதும் இங்கிலாந்து அரசு அகதிகளாக வருவோரை தங்க வைப்பதற்காக, கைவிடப்பட்ட கப்பலை தங்குமிடமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
எனவே பிப்பி ஸ்டாக்ஹோம் எனப்படும் கப்பலே இவ்வாறு பயன்படுத்தபட உள்ளது.
சிறிய படகுகளில் நாட்டிற்குள் அடைக்கலம் தேடி தனித்து வரும் 500 ஆண்களை இந்த கப்பலில் தங்க வைக்கும் வகையில் அறைகள், சுகாதார வசதி, உணவு வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மனித உரிமை மீறலாகும் எனவும் சரியான தங்கும் வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், பிரதமர் ரிஷிசுனக்கின் சொந்த கட்சியின் சில எம்.பி.க்களே விமர்சனம் செய்துள்ளனர்.