கிழக்கு லண்டனில் கொலை செய்யப்பட்டு, ஆற்றில் வீசப்பட்ட பெண்ணின் உடலை பொலிஸார் தேடி வருகின்றனர்.
Orchard Place பகுதியில் வசித்து வந்த 45 வயது சுமா பேகம் என்ற பெண், ஏப்ரல் 28ம் திகதிக்கு பின்னர் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஏப்ரல் 30ஆம் திகதி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவர் கணவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மனைவியான சுமா பேகத்தை கொலை செய்து அவரது சடலத்தை ஒரு சூட்கேஸில் அடைத்து லியா நதியில் அவரது கணவன் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கணவன் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜரானதுடன், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பொலிஸார் மற்றும் சுழியோடிகள் குழு ஒன்று ஆற்றுக்குள் இறங்கி பெண்ணை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.