ஜெர்மன் உக்ரைனுக்கு 300 கோடி டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. ரசியா உக்ரைன் போரில் மேற்கத்தைய நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவிலான உதவிகளை செய்து வருகின்றது.
30 கவச பீரங்கிகள், தரை மற்றும் தண்ணீரிலும் சென்று தாக்குதல் நடத்தும் Marder வகை பீரங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் கொண்ட ஆயுத தொகுப்பு வழங்கப்படுவதாக ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டுமென விரும்பினாலும், துரதிர்ஷ்டவசமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அது தென்படவில்லையெனவும் போரிஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் ஜெர்மன் பயணத்தைத் தொடர்ந்து இந்த ஆயுத தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. போர் முடியும் வரையில் ஆயுத உதவி தொடரும் என்றும் ஜெர்மன் தெரிவித்துள்ளது.