சாரதி இல்லாத முதலாவது பயணிகள் பஸ் சேவை, இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே சுயமாக ஓடும் முதலாவது பயணிகள் பஸ் சேவையாக இது கிழக்கு ஸ்காட்லாந்து, Edinburgh Park station இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்ஸில் சென்சார்கள் உள்ளன. அவை 14 மைல் பாதையில் 50 மைல் வேகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளில் பயணிக்கவுள்ளது.
சாரதி இல்லாத பஸ் என்ற போதிலும், இரண்டு ஊழியர்களுடன் அந்த பஸ்ஸில் இருப்பர்.
ஒருவர், தொழில்நுட்பத்தை கண்காணிக்க ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பார். அவர் பஸ் கேப்டன் என்று அழைக்கப்படுபவர். மற்றயவர் பயணிகளுக்கு ஏறுவதற்கும் டிக்கெட் வாங்குவதற்கும் உதவுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான ஐந்து ஒற்றை அடுக்கு தான் இயங்கி பஸ்கள் வாரத்திற்கு சுமார் 10,000 பயணிகள் பயணம் செய்யும் திறன் கொண்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.