உலக பணக்காரர் எலான் மஸ்க் பிரான்சில் முதலீடு செய்ய உள்ளார்ந்த விருப்பினால் அதற்காக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரனை பாரிசில் சந்தித்து முதலீடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஒருமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் நேர்மையான அணுகுமுறையுடன் இருவரும் பேச்சுநடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரான்சில் தொழில்களுக்கு முதலீடு செய்வதை ஊக்குவிக்க அந்நாட்டு அதிபர் மேக்ரான் சிறப்பு மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக எலான் மஸ்க்கை அழைத்து பேச்சுநடத்தியுள்ளார். மிகவும் வெளிப்படையான சந்திப்பு என்று பிரானஸ் நிதியமைச்சர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் எலான் மஸ்க்கை இமானுவல் மேக்ரன் சந்தித்த போது, எலான் மஸ்க் பிரான்சில் முதலீடுகள் செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளார்