பிரபலங்களின் அந்நியோன்னிய வாழ்க்கையை படம் பிடித்து அதில் பல சுயேச்சை ஊடகங்கள் வெற்றிகளை காண்பது உண்டு அவ்வாறே பிரின்ஸ் ஹாரி, மேகன் தம்பதியினருக்கும் இப்படியான ஒரு நிகழ்வு பதிவாகியுள்ளது. டயானா மரணத்தின் போதும் இப்படியான சம்பவமே நடை பெற்றது என்பதும் குறிப்பிட தக்க விடயம் ஆகும்.
நியூயார்க் நகரில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய ஹாரி, மேகன் தம்பதியரை சுயேச்சை புகைப்படக்காரர்கள் ஏராளமான கார்களில் 2 மணி நேரத்திற்கு மேல் துரத்தியதாகவும், அதனால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்க இருந்ததாகவும் இளவரசர் ஹாரியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர்கள் பயணித்த டக்சி ஓட்டுநர் சுக்சரன் சிங்கிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, 2 கார்களில் புகைப்படக்காரர்கள் பின்தொடர்ந்ததாகவும், சேஸிங் எல்லாம் நடக்கவில்லை எனவும் கூறினார்.