பிரேசில் மற்றும் கொலம்பியா உட்பட பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ள உலகின் மிகப்பெரிய மழைக்காடு அமேசான் காடு.
கொலம்பியாயாவில் இருந்து தம்பதியொன்று, 11 மாதங்களேயான சிசு உள்ளிட்ட தனது 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு இம்மாதம் 1ஆம் திகதி பயணித்துள்ளனர்.
அமேசான் காட்டுப் பகுதியில் சென்றபோது, ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என மூவரும் உயிரிழந்தனர்.
அதிர்ஷ்டவமாக 13 வயது, 9 வயது, 4 வயது மற்றும் 11 மாத கைக்குழந்தை உட்பட நால்வர், இந்த விபத்தில் உயிர் தப்பினர். எனினும், இவர்கள் அனைவரும் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர்.
அங்கு விமானி, தம்பதியர் என மூவரின் உடல்களை கைப்பற்றினார். ஆனால், குழந்தைகளின் நிலை தெரியாததால் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகளை மீட்கும் பணியில் மோப்ப நாய்கள் சகிதம் 100 இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் சிசு, 3 சிறுவர் மற்றும் சிறுமிகள், கடந்த 17ஆம் திகதி உயிருடன் மீட்கப்பட்டனர்.