375 மில்லியன் டொலர் உதவிக்கு உறுதியளித்த ஜோ பைடன்.வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று இன்று நிறைவுற்றுள்ளது.
ஜி7 மாநாட்டிற்கு இடையே, உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின்போது, உக்ரைனுக்கு மேலும் 375 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக, ஜோ பைடன் உறுதியளித்தார்.
ஜோ பைடன் ரசியாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த, தங்களால் முடித்த அனைத்தையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலை தனித்தனியே சந்தித்து பேசிய ஜெலென்ஸ்கி, போரில் உக்ரைனுக்கு உதவி புரிவதற்காக நன்றி தெரிவித்தார்.