ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் Arabsat BADR-8 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனாவரல் ஏவுதளத்திலிருந்து இது செலுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி, மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
4 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட BADR-8 செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 35 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் ஒளிபரப்பு, பிராட்பேண்ட் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க இந்த செயற்கைகோள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.