அழிவின் உச்சத்தில் இப்போது ஈரான் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரானுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றால் நீரினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஈரான் ஆப்கான் இடையில் தற்போது மினி வார் இடம்பெற்று வருகிறது எனலாம் .
ஆப்கானுக்கும் ஈரானுக்கும் இடையில் பல காலமாக ஒப்பந்தம் ஒன்று நிலவி வருகின்றது. 1880,1972, 1973 என இந்த ஒப்பந்தம் தொடர்ந்து வருகிறது. அவை ஹெல்மெந் ஆறிலிருந்தே ஆரம்பமானது இது ஈரானுக்கும் ஆப்கானிஸ்த்தானுக்கும் பொதுவாக பாயும் ஆறு ஆகும். இந்த ஆறிலிருந்து நீரை சமமாக பெறுவதற்கே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
அதில் 1973 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் பிரகாரம் ஒரு வருடத்தில் மழை பெய்யும் அளவிற்கு ஏற்றற் போல ஈரானுக்கு ஒரு செக்கனுக்கு 1 கியூப் நீரினை கொடுக்க வேண்டும் என்பதே அதுவாகும் இந்த நீர் கசக்கி டாம் மூலம் வழங்கப்பட்டு வந்தது.
2020,2021,2022 ஆகிய ஆண்டுகளில் உள்நாட்டில் இடம்பெற்ற மோதல்களால் தலிபான் வசமானது ஆப்கானிஸ்தான் இதன் பின் இந்த கசக்கி அணையின் ஊடாக நீரை சிறிது சிறிதாக நிறுத்தியதன் விளைவால் இன்று ஈரான் வரட்சியில் வாடுவதுடன் நீருக்காக தாலிபான்களுடன் சண்டை செய்து வருகிறது.
மேலும் இந்த சண்டையில் தலிபான்கள் அமேரிக்கா விட்டு சென்ற ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றது. ஒரு நாளுக்குள் மாத்திரம் சுமார் 6 பேர் மரணித்துள்ளனர்.