12
நைஜீரியாவில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காணப்பட்ட நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலுக்கு, எதிர்க்கட்சிகளால் சட்டப்பூர்வ சவால் எழுந்தன.
எனினும், அந்நாட்டின் புதிய ஜனாதிபதியான போலா தினுபு, இன்று (30) கடமையை பொறுப்பேற்றார். தலைநகர் அபுஜாவில் சுமார் 5,000 பேர் அமர கூடிய ஈகிள் சதுக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
போலா தினுபு, நைஜீரியாவின் 16ஆவது ஜனாதிபதி ஆவார்.