புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ரயில் வேலைநிறுத்தத்தின் போது இலண்டனை எப்படி சுற்றி வருவது?

ரயில் வேலைநிறுத்தத்தின் போது இலண்டனை எப்படி சுற்றி வருவது?

1 minutes read

இந்த வாரம் இங்கிலாந்தில் பல ரயில் வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பல்வேறு கோரிக்கைகளுடன் ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை இந்த மாத இறுதி மற்றும் ஜூன் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இது பல ரயில் சேவைகளை பாதிக்கவுள்ளது.

நான்கு நாட்களுக்குள், மூன்று ரயில் வேலைநிறுத்தங்கள் நடைபெறும்.

மே 31 புதன்கிழமை மற்றும் FA கோப்பை இறுதிப் போட்டியின் நாளான ஜூன் 3 சனிக்கிழமை ஆகிய நாட்களில் அஸ்லெஃப் ரயில் ஓட்டுநர்கள் பணியில் இருந்து வெளியேறுவார்கள்.

அத்துடன். RMT (National Union of Rail, Maritime and Transport Workers) தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் ஜூன் 2 வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.

மே 30 செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் இருந்து ஜூன் 4 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம் வரை ரயில் சேவையில் குறுக்கீடுகள் இருக்கலாம் என்று கால அட்டவணை குறிப்பிடுகிறது.

இதனால், பயணத்தை ஆரம்பிக்கும் முன்னதாக மக்கள் தமது திட்டங்களை இருமுறை சரிபார்ப்பது நல்லது என அறிவுத்தப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More