நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் ட்விட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது.
சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.
இதனையடுத்து, சீமான் ட்விட்டர் கணக்கை முடக்க சென்னை பொலிஸார் பரிந்துரை செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இந்நிலையில், சீமான் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை என்று சென்னை பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
முன்னதாக, ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.