அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள விமானப்படைப் பயிற்சிக் கழகத்தின் பட்டதாரிகளிடையே மேடையில் உரையாற்றிய பின்னர் தமது இருக்கைக்குத் திரும்பிச் செல்லும் வழியில் ஜனாதிபதி ஜோ பைடன் கால் தடுக்கிவிழுந்தார்.
இதன்போது, விமானப் படை வீரர் ஒருவர் அவரைத் தூக்கிவிட்டார்.
மேடையில் இருந்த சிறிய மணல் மூட்டை அவரைத் தடுக்கிவிழச் செய்ததாகவும் ஜனாதிபதி பைடன் நலமாக இருப்பதாகவும் வெள்ளை மாளிகையின் தொடர்பு இயக்குநர் தமது Twitter பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
80 வயதுடைய ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் அதிக வயதான ஜனாதிபதியாக உள்ளார். எதிர்வரும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிடவுள்ளார்.
அவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அடிக்கடி உடற்பயிற்சி செய்வதாகவும் அவரின் அதிகாரபூர்வ மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.