ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆகக் குறைந்துள்ளது என்று, அந்நாட்டு காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இளையவர்களுக்கான சம்பள அதிகரிப்பு, பிள்ளைப் பிறப்புக்கான சலுகைகள் என அரசு பல சலுகைகளை அறிவித்தாலும் அந்நாட்டு தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகிறது.
இதனால் வரும் 2030க்குள் ஜப்பானின் மக்கள்தொகை அதல பாதாளத்திற்கு சென்று விடும் என அஞ்சப்படுகிறது.
125 மில்லியனுக்கும் அதிகமான ஜப்பானின் மக்கள்தொகை 16 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
2070ஆம் ஆண்டு 87 மில்லியனாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும் முதியோர் தொகை அதிகரித்து வருவதாலும் ஜப்பான் அதிரடி திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த முனைப்புடன் செயற்படுகிறது.