வெள்ளம் காரணமாக தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 12 பேர் வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தில் உயிரிழந்தனர்.
எல் கால்லோ பகுதியில் கனமழையால் அந்த சுரங்கம் இடிந்து விழுந்தது. கடந்த சில நாட்களாக அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
112 பேர் சுரங்க இடிபாடுகளில் இருந்து தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக சுரங்கத்தை திறந்து தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.