ஏமன் உள்நாட்டு போர் காரணமாக சவுதி அரேபியா – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது.
இதனால் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஈரான் மூடியது.
இந்நிலையில், சவுதி அரேபியா – ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி சவுதி – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அத்துடன், இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களை திறக்க 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இதன்படி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் ஈரான் தங்கள் தூதரகத்தை, ரியாத்தில் இன்று (06) திறக்கின்றது.
இந்த தூதரக திறப்பு விழாவில் ஈரான் – சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.