கனடாவில் வரலாறு காணாத காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. கனடாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் வட்டாரத்திலும் காட்டுத்தீ மூண்டுள்ளது.
இந்த காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்களை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
கனடாவில் இதுவரை ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் இதுவே மிக மோசமானது என தெரிவிக்கப்படுகிறது.
கியூபெக் (Quebec) மாநிலமே காட்டுத் தீயால் மிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 35,000 சதுர கிலோமீட்டர் நிலம் காட்டுத்தீக்கு இரையாகிவிட்டது.
காட்டுத்தீயை அணைக்கத் தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராடுகின்றனர்.
ஏற்கெனவே 20,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.