இத்தாலி பாராளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டியெல்லோ (Gilda Sportiello), அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஜனரஞ்சகமான மூவிமென்டோ 5 ஸ்டெல்லின் உறுப்பினரான ஸ்போர்டியெல்லோ, சபையில் பொது நிர்வாக வாக்கெடுப்பின் போது, தன்னுடைய இரண்டு மாத குழந்தை ஃபெடரிகோவுக்கு, பாராளுமன்றத்தின் உயர் பெஞ்சில் அமர்ந்திருந்தவாறு தாய்ப்பாலூட்டியுள்ளார்.
இந்த நிகழ்வு பல நாடுகளில் மிகவும் பொதுவானதாக இருக்கும். ஆனால், பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இத்தாலியில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.