உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.
உக்ரைனின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்து வருகிறது. இதனால் தற்போது இரு தரப்பிலும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
அண்மையில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்யப் பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் ட்ரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், ஈரான் உதவியுடன் ட்ரோன் தொழிற்சாலையை ரஷ்யா கட்டிவருவதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் ட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.