அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 21ஆம் திகதியில் இருந்து 24ஆம் திகதி வரை அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தில், சுமார் 7 ஆயிரம் இந்திய-அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் முன்னிலையில் வழங்குப்படும் வரவேற்பை பிரதமர் மோடி ஏற்கவுள்ளார்.
22ஆம் திகதி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை அழைப்பின் பேரில், அமெரிக்க காங்கிரஸ் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்க காங்கிரஸ் அமர்வில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறவுள்ளார்.