TikTokஇல் செய்தித் தகவல்களைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
TikTok மற்றும் Snapchat சமூக ஊடகங்களின் பயனீட்டாளர்களில் 55 சதவீதத்தினரும் Instagram பயனீட்டாளர்களில் 52 சதவீதத்தினரும் சமூக வலைத்தள பிரபலங்களிடமிருந்து செய்திகளைப் பெறுகின்றனர்.
பாரம்பரிய ஊடகத்திலிருந்தும் அதன் செய்தியாளர்களிடமிருந்தும் செய்திகளைப் பெறுவோர் 33 சதவீதம் முதல் 42 சதவீதத்தினரே என்று ராய்ட்டர்ஸ் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வுக்காக 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 94,000 பேர் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களிலேயே அதுவும் Facebookஇல் தான் இன்னும் அதிகமானோர் செய்திகளைப் பெறுகின்றனர். ஆனால், அந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்கு அடுத்த நிலையில் தற்போது TikTok முன்னேறி வருவதாக, குறித்த ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.