செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்!

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்!

1 minutes read

அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் ஒன்று மாயமாகியுள்ளது.

இந்த சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் (Hamish Harding) மற்றும் அவரது 19 வயது மகன் உட்பட 5 பேர் பயணித்துள்ளனர்.

கனடா, நியூபோல்ட்லேண்ட் மாகாணத்தில் இருந்து கடந்த 16ஆம் திகதி “டைட்டன்” என்ற குறித்த சுற்றுலா நீர்மூழ்கி கப்பலே, அட்லாண்டிக் கடலில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிடச் சென்றுள்ளது.

கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இரவு, நியூபவுண்ட்லேண்ட் பகுதியில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கடலில் நீர்மூழ்கி கப்பல் பயணித்தபோது ரேடார் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கனடா, அமெரிக்க கடற்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த “டைட்டன்” நீர்மூழ்கி கப்பலில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் உள்ள நிலையில், நீர்மூழ்கி கப்பலில் பயணித்துள்ளவர்களின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை.

இதனால், மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இங்கிலாந்தில் 2 ,200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் 1985ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More