இங்கிலாந்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சட்டவிரோத புலம்பெயர்வு தடுப்புச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு, வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்தல் மசோதா தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று, வேல்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. அதில், பெரும்பான்மை உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
மசோதாவுக்கு எதிராக 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.
மசோதாவை எதிர்த்தவர்கள், அது கொடூரமானது என்றும், புகலிடம் கோருவதற்கே அது தடையாக அமையும் என்றும் விமர்சித்துள்ளனர்.
வேல்ஸ் (Wales), ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் கிழக்கே இங்கிலாந்தும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் ஐரியக் கடலும் உள்ளன.