பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்.
இதன்படி, அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகின்றார்.
அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது எப்போதுமே ஒரு பெருமையாக கருதுவதாக பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் பெண் எம்.பி.க்கள் இருவர் முடிவு செய்துள்ளனர்.
ரஷிதா தலைப் மற்றும் இல்ஹான் உமர் ஆகிய இரண்டு அமெரிக்க பெண் எம்.பி.க்களும் பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி பிரதமர் மோடியின் உரையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர்.